புதிய தகவல்கள் : எதிர் வினையாற்று




பெண்ணுக்கு உதவி செய்யப் போய் வந்த வினை!

நடிப்பு:சனம் ஷெட்டி, லட்சுமி பிரியா

பிரிவுவகை: Romance

இயக்குனர்:அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ்

இசை: கன்ஷியாம்

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார்.

அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்க மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.