புதிய தகவல்கள் : சார்லி சாப்ளின் 2 (U) (2019)


சார்லி சாப்ளின் 2 இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபு தேவா நடிக்கும் அறிவியல் ரீதியான திரைப்படம்.

நடிப்பு: பிரபு தேவா,நிக்கி கல்ராணி,பிரபு,அதாஹ் ஷர்மா மற்றும் பலர்

பிரிவுவகை: நகைச்சுவை திரைப்படம்

இயக்குனர்:சக்தி சிதம்பரம்

தயாரிப்பாளர்: டி சிவா

திரு (பிரபு தேவா) ஒரு திருமண உறவை உருவாக்கும் மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் 99 ஜோடிகளுக்கு தன் நண்பர்களான அரவிந்த் ஆகாஷ் மற்றும் சந்தனா ராஜுடன் இணைந்து திருமணம் செய்வித்துள்ளார். பிறகு, பிரபு தேவாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கின்றனர். அதே சமயத்தில் ராமகிருஷ்ணனின் (பிரபு) மகளான சாரா (நிக்கி கல்ராணி)-யை கண்டவுடன் காதலில் விழ, இது சாராவுக்கும் தெரிய வர அவரும் ஒப்புக்கொள்கிறார். இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடும் நடக்கிறது. மறுபுறம் திருவின் நண்பரான ராஜா (விவேக்), சாராவின் நடத்தை பற்றி ஆதாரத்துடன் திருவிடம் நிரூபிக்க, ஏமாற்றத்துடன் இருந்த திரு, சாராவிடம் திருமணத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறார். இதே வேளையில் மற்றொரு பெண் சாரா (அடா சர்மா) திருவின் வாழ்க்கையில் நுழைகிறார். இவரை திருமணம் செய்துகொள்வாரா? இல்லை நிக்கிகல்ராணியை திருமணம் செய்துகொள்வாரா? இறுதியில் திருவின் திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான மீதிக்கதை.