புதிய தகவல்கள் : பெளவ் பெளவ்


அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் உருவாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் முன்னோட்டம்.

நடிப்பு:மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி மற்றும் பலர்

பிரிவுவகை: அதிர்ச்சிகலந்த சம்பவம்

இயக்குனர்:பிரதீப் கிளிக்கர்

இசை:மார்க் டி மியூஸ் மற்றும் டெனிஸ் வல்லபன்

லண்டன் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.நடராஜன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பெளவ் பெளவ்’. இந்தப் படத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்க் டி மியூஸ் மற்றும் டெனிஸ் வல்லபன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். அறிமுக இயக்குநரான பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது.

தனிமையில் இருக்கும் ஐந்து வயது சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள அன்பை பற்றி பேசும் இப்படம் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவில் நடைபெற்ற லவ் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான விருதை பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற குழந்தைகள் திரைப்படவிழாவில் தொடக்கத் திரைப்படமாகவும்(opening film) திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது பெளவ் பெளவ்.